
'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரவாசிகள், MTC மாநகரப் பேருந்துகளின் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'சென்னை பஸ்' (Chennai Bus) என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.
சென்னை மாநகர MTC பேருந்து நிறுத்தங்கள், பேருந்தின் நிகழ்நேர இருப்பிடம், MTC பேருந்துகளின் வழித்தடம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் வகையில் இந்தப் புதிய செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த செயலி குறித்து சென்னை வாழ் மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும், அவர்கள் அதனைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் எக்ஸில் அதுகுறித்து பதிவிட்டிருக்கிறார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
ட்விட்டர் அஞ்சல்
மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் எக்ஸ் பதிவு:
Dear Chennai Citizens
— Dr Alby John (@albyjohnV) November 25, 2023
Please download Chennai Bus App for real time information on MTC Buses. Accurate data in Real time to use the MTC Bus Services better. #MTC #ChennaiBus pic.twitter.com/1KgjijUK7U