
தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களோடு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி(செவ்வாய்கிழமை) சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை வருகிறது.
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுதல், சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளல் போன்றவைகளை திட்டமிட்டு பயணம் மேற்கொள்வர்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசு 1100 கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதே போல், பொது மக்கள் வசதிக்காக சில இடங்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த சேவைகளை பெற, பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலினை அதிகம் பயன்படுத்துவர்.
மெட்ரோ
மெட்ரோ ரயில் சேவையினை பயணிகள் பயன்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது
இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களின் பயணிகளுக்காக ஒரு புதிய வசதியினை இன்று(ஆகஸ்ட்.,11) அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த தொடர் விடுமுறை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு மற்றும் இதர இடங்களுக்கு செல்ல மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கான வசதிக்காக, தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வரும் 6 நிமிட இடைவெளி கொண்ட மெட்ரோ ரயில் சேவை, இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
இதனால் இந்த நீட்டிக்கப்பட்டுள்ள, நெரிசல்மிகு நேரங்களில் மட்டும் இயக்கப்படும், மெட்ரோ ரயில் சேவையினை, பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும், மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.