Page Loader
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Oct 16, 2023
04:38 pm

செய்தி முன்னோட்டம்

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.,மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 17ம்.,தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக்காவலில் இருக்கும் பட்சத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு கோரப்பட்டது. ஆனால் அதனை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து இன்று(அக்.,16)நடந்த விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி, தீர்ப்பு தேதியினை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஜாமீன் மனு விசாரணை