NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு
    மிக்ஜாப் புயலால் சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு

    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 04, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல் காரணமாக தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். மேற்கூறிய நான்கு மாவட்டங்களைத் தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருக்கிறது.

    இது தவிர, தமிழகத்திலுள்ள 23 மாவட்டங்களில் இந்த மிக்ஜாம் புயலையொட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

    சென்னை

    47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு: 

    மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

    நேற்று மாலை தொடங்கி, தற்போது இடியுடன் கூடிய மழை சென்னையில் நீடித்து வருகிறது. இன்று இரவு வரை இந்த மழை நீடிக்கும் என எதிர்பார்க்ப்படும் நிலையில், பல்வேறு இடங்களில் மரம் விழுந்து பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை வரை சென்னையில் 340 மிமீ மழை பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

    கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் இதே அளவு மழை பதிவாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த முறை மிக அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    சென்னை

    இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி தமிழ்நாடு
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் பருவமழை
    'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன? அறநிலையத்துறை

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025