NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.

    இதில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    நேற்று சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    முன்னேற்பாடு

    விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வருபவர்களுக்கான முன்னேற்பாடுகள்

    இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன்.

    அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இழப்பீடு

    ஆறுதல் மற்றும் இழப்பீடு

    இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

    #BREAKING | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை pic.twitter.com/LEaTdb4Y8w

    — Sun News (@sunnewstamil) October 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்
    சென்னை
    விமானப்படை
    தமிழகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மு.க.ஸ்டாலின்

    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்
    UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?  மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி

    சென்னை

    அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்
    இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு வானிலை எச்சரிக்கை
    சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா

    தமிழகம்

    பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025