இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்: நேர அட்டவணை, கட்டண விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ரயில் சேவை நேரங்கள் மற்றும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும்.
இதேபோல் மதுரை - பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி, இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை- நாகர்கோவில்
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் நேரம், கட்டணம்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் பொருத்தவரை, எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் (20627) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு இந்த ரயில் (20628) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு சேர்கார் கட்டணம் ரூ.1,760. (உணவுக் கட்டணம் உட்பட).
எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.3,240. (உணவுக் கட்டணம் உட்பட).
மதுரை - பெங்களூரு
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் நேரம், கட்டணம்
மதுரை - பெங்களூரு வரை இயக்கப்படும் புதிய வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு ரயில் (20671) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை அடையும்.
மறுமார்க்கமாக, பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (20672), அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை அடையும்.
இந்த ரயிலில் உணவுக் கட்டணம் உட்பட சேர் கார் கட்டணம் ரூ.1,575.
எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,865 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.