Page Loader
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 

எழுதியவர் Sindhuja SM
Sep 09, 2023
09:00 am

செய்தி முன்னோட்டம்

ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவருமான என் சந்திரபாபு நாயுடுவை, இன்று(செப் 9) குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அதிகாரிகள் நேற்று இரவு வந்து எந்த ஆதாரமும் காட்டாமல் என்னை கைது செய்தனர். என்னை கைது செய்ததற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டேன். அதற்கான ஆதாரத்தையும் கேட்டேன். அவர்கள் எஃப்.ஐ.ஆர் மூலம் இங்கு வந்துள்ளனர். அதில் எனது பங்கு பற்றியோ அல்லது கூடுதல் விவரங்களோ இல்லை. இது மிகவும் வருத்தமானது மற்றும் தவறானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒய்ப்

FIRரில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை(FIR) 2021இல் பதிவு செய்யப்பட்டது. 250 கோடிக்கு மேல் சொத்துக் குவித்துள்ளதாக இந்த FIR சந்திரபாபு நாயுடுவின் மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 1வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது, FIR விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், அவரது வழக்கறிஞர்கள் FIR அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி முதன்மை சாட்சியத்தையும் கோரினர். வழக்கறிஞர்களுக்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் அனைத்து விவரங்களையும் ரிமாண்ட் அறிக்கையில் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். மேலும், சந்திரபாபு நாயுடு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.