Page Loader
9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Aug 28, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 28 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகஸ்ட் 29 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகஸ்ட் 30 மற்றும் ஆகஸ்ட் 31 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

க்ஜ்கவ்ஸ்ட்

செப்டம்பர் 1 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 2 மற்றும் செப்டம்பர் 3 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.