NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

    ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 05, 2024
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன.

    சம்பை சோரனின் வெற்றியை ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதற்கு ஜார்க்கண்ட் சட்டசபையில் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனையடுத்து, சட்டசபை இன்று ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டசபை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் பெரும்பான்மை மதிப்பெண் 41 ஆகும்.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பேசிய சம்பை சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சிக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அது 50 ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

    ஜார்க்கண்ட்

    'மாநில அரசாங்கத்தை கலைக்க பாஜக முயற்சி': சம்பை சோரன் 

    அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கூட்டணி எம்எல்ஏக்கள் உட்பட 47 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். 29 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

    ஜார்க்கண்ட் சட்டசபையின் இன்றைய சிறப்பு அமர்வில் பேசிய முதல்வர் சம்பை சோரன், மாநில அரசாங்கத்தை கலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பேசிய அவர், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    "ஹேமந்த் சோரனை பொய் வழக்குகளில் சிக்க வைக்க பாஜக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது," என்று நம்பிக்கைத் தீர்மானத்தை முறியடித்ததற்கு பிறகு சம்பை சோரன் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    பாஜக

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி இந்தியா
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா

    பாஜக

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் நாடாளுமன்றம்
    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர் இங்கிலாந்து
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025