Page Loader
ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்
ஐஐடிகளில், இதுவரை பல தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்

எழுதியவர் Sindhuja SM
Mar 12, 2023
09:40 am

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 12 அன்று, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(ஐஐடி) முதலாம் ஆண்டு பிடெக் படித்து கொண்டிருந்த மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார். இதே போல் நாடுமுழுவதும் உள்ள ஐஐடிகளில், இதுவரை பல தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. கடந்த மாதம், ஐஐடி சென்னையில் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். அதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். ஐஐடிகளில் சாதிய பாகுபாடுகள் அதிகம் பார்க்கப்படுவதாக பல்வேறு இயக்கங்களும் மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவர் தர்ஷன் சோலங்கிக்கும் அதே போன்ற சாதிய துன்புறுத்தல்கள் தான் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது பெற்றோரும் இதே குற்றசாட்டை தான் முன் வைக்கின்றனர்.

இந்தியா

இது தற்கொலை அல்ல நிறுவன கொலை: மாணவர்கள்

1960கள் முதல் 2000 வரை, ஆதிக்கச்சாதி மாணவர்கள் மட்டுமே ஐஐடியில் அதிகம் படித்து வந்தனர். ஆதிக்கச்சாதி மாணவர்களுக்கு மட்டும் அதிக அறிவும் ஒழுக்கமும் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்தது எல்லாம் தனிச்சலுகைகள் மட்டுமே என்கின்றனர் முற்போக்கு அமைப்பினர். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் ஐஐடி நிறுவனத்தில் குறைந்த அளவில் மட்டுமே பட்டியலின மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்கள் மாட்டமில்லாமல் இங்குள்ள ஆசிரியர்கள் நியமனத்திலும் பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருப்பது கடந்த வருட மக்களவைக் கூட்டத்தில் தெரியவந்தது. ஐஐடியில் நடக்கும் சாதிய பாகுபாடுகளுக்கு இதுவும் ஒரு பெரும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.