Page Loader
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2025
02:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு 'Y' வகை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தவறாமல் ஆய்வு செய்து வருகிறது. மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி அச்சுறுத்தல் இருக்கும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பாதுகாப்பு பிரிவுகள்

மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?

பாதுகாப்பு வகைகள் பொதுவாக பிரதிநிதித்துவம், விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் பிரபலங்களுக்கு குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு 'Z', 'Z Plus', 'Y' போன்ற வகைகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கும் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. 'Y' வகை பாதுகாப்பில், 8 முதல் 11 பேர் கொண்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதன்படி, அவருக்கு 24 மணி நேரமும் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள், ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு வழங்குவார்கள். இந்த பாதுகாப்பு, தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கும் அவர் சென்றாலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.