வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வரும், மனிதர்கள் மீதான நாய்கள் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட 23 நாய்களை இறக்குமதி செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் தடை விதிக்கட்டுள்ளது.
வீட்டில் செல்லப்பிராணியாக ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் இந்த வகை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் எனவும், இதனை மாநில அரசு கண்கணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நாய்கள் விற்பனைக்கு தடை
#JustNow | இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை!#SunNews | #ForeignDogBreeds | #India | #Rottweiler | #PitBull pic.twitter.com/HM638UfhSu
— Sun News (@sunnewstamil) March 13, 2024