NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 19, 2023
    11:16 am
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு! 
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு

    கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) மீண்டும் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. விண்டுஃபால் வரி என்றால் என்ன, அது ஏன் விதிக்கப்படுகிறது? விண்டுஃபால் வரி: ஒரு நிறுவனத்துக்கு அல்லது துறைக்கு எதிர்பாராத வகையில் திடீரென வெளிப்புறக் காரணிகளால், எதிர்பார்ப்பை விட கூடுதல் லாபம் கிடைக்கும் போது, அந்த லாபத்தின் மீது விண்டுஃபால் வரியை மத்திய அரசு விதிக்கும். ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக கடந்த ஆண்டு திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்தன. வெளிப்புறக் காரணியால் ஏற்பட்ட இந்த விலையேற்றத்தால் பெட்ரோல், டீசல் நிறுவனங்களுக்கு எதிர்பாராமல் திடீரென அதிக லாபம் கிடைத்ததையடுத்து அந்தத் துறையில் விண்டுஃபால் வரியை அமல்படுத்தியது மத்திய அரசு.

    2/2

    இப்போது என்ன அறிவிப்பு: 

    தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா பெட்ரோல் மீது டன்னிற்கு ரூ.6,400-ஐ சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதித்திருக்கிறது மத்திய அரசு. இந்த வரி விதிப்பு பெட்ரோல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் வரிகளை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் மீதான ஏற்றுமதி வரியை நீக்கியும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதனால் டீசல் மீது ஏற்கனவே இருந்த சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.0.50 முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு உற்பத்தி துறைக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. விண்டுஃபால் வரியானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பரிசீலனை செய்யப்பட்டு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டவோ, குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய அரசு

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை வெளியுறவுத்துறை
    இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா? தமிழ்நாடு
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் உச்ச நீதிமன்றம்
    10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!  நேபாளம்

    மத்திய அரசு

    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு  கோவை
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  தமிழ்நாடு
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  இந்தியா
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023