Page Loader
வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர்
சம்மந்தப்பட்ட மாணவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2023
09:42 am

செய்தி முன்னோட்டம்

மும்பை அருகே உள்ள தானேயில் செயல்பட்டு வரும், பண்டோத்கர் கல்லூரியில் நடைபெற்ற NCC பயிற்சியின் போது, NCC சீனியராக கருதப்படும் ஒரு நபர், 8 பேரை சேற்றில், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதும், பின்னர் அவர்களை பின்னால் இருந்து பிரம்பால் அடிப்பதுமான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. வீடியோவில், எட்டு இளைஞர்கள், சாரல் மழையில், ஒரு சேற்று குட்டையில் புஷ்-அப் செய்கின்றனர். ஆனால், அவர்கள் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, தலையை தரையில் வைத்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் ஒரு நபர், கையில் பிரம்பு போன்ற ஒரு தடியை பிடித்தபடி நிற்கிறார். திடீரென, ஒவ்வொருத்தர் பின்னால் இருந்தும், அவர் அடிக்கிறார். வலி தாங்காமல் சில NCC மாணவர்கள் அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

வைரல் வீடியோ