முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது CBI வழக்கு
செய்தி முன்னோட்டம்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
பதவிக்காலத்தில் அவர் ஆவின் நிறுவனம் உட்பட ல அரசுத் துறைகளில் வேலை நியமனம் செய்வதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் விரைவில் விசாரணைகள் நடத்தி குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் இறுதியில், நீதிபதி இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக வழக்கை விசாரித்த மத்திய குற்ற புலனாய்வுத்துறை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு#SunNews | #RajendraBalaji | #ADMK | #CBICase pic.twitter.com/kIU320BDpa
— Sun News (@sunnewstamil) February 18, 2025