Page Loader
தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 
தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 

எழுதியவர் Nivetha P
Aug 01, 2023
03:01 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் தவறாது காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு குறித்து ஆய்வினை மேற்கொள்வது வழக்கம். அதன் படி, இந்த ஆய்வானது கர்நாடகாவில் 35, தமிழகத்தில் 28 என மொத்தம் 63 இடங்களில் ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதில், 'பயோகெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்' என்னும் அளவீட்டில் கணக்கெடுக்கப்படும் நீரில் உள்ள மாசின் அளவானது கர்நாடகா மாநிலத்தில் 6 என்ற அளவீட்டிலும், தமிழ்நாடு மாநிலத்தில் 17 என்ற அளவீட்டிலும் பதிவாகி உள்ளது என தெரியவந்துள்ளது.

மாசு 

2010ம் ஆண்டு முதல் 406 ஆலைகளுக்கு அபராதம் விதிப்பு 

இதனையடுத்து தமிழகத்தின் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் செயல்பட்டு வரும் ரசாயனம், தோல் உற்பத்தி, சர்க்கரை உள்ளிட்ட ஆலைகளின் கழிவுகள் அனைத்தும் நீரில் கலக்கப்படுவது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பாக மேட்டூர், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் தான் அதிகளவு காவிரி நீரானது மாசடைகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு மட்டுமே காவிரி ஆற்றினை மாசடைய செய்யும் 33 நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. அதே போல் 2010ம் ஆண்டு முதல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 406 ஆலைகளுக்கு அபராதம் விதித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.