
காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நெடுநாளாக நடந்து வரும் நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காவிரி நீதிநீரினை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்று கர்நாடகா மறுப்பு தெரிவித்ததால், கடந்த 14ம்தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.
அதன்படி, காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000.,கன அடிநீர் திறந்துவிடப்படும் என்று கூறிய நிலையில், வினாடிக்கு 24,000.,கன அடிநீர் திறந்துவிடவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது 3 உச்சநீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 25ம்தேதி இதுதொடர்பான விசாரணை நடந்த பொழுது ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் திறக்கப்பட்டதா?என ஆணையம் அறிக்கை அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையினை செப்டம்பர் 1ம்.,தேதிக்கு ஒத்திவைத்தனர்.
விசாரணை
அவசர வழக்காக விசாரிக்க கோரிய தமிழக அரசு
இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை செப்.,11ம் தேதி நடந்தால் போதுமானது என்று கர்நாடகா அரசு கூறியநிலையில், இதனை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
அதன்பேரில் செப்.,6ம் தேதியான இன்று இந்த வழக்கின் விசாரணை நடக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ஆனால் இதனை விசாரிக்கும் 3 நீதிபதிகளுள் ஒருவரான நரசிம்மா விடுப்பில் சென்றுள்ளதால் இன்றைய விசாரணை பட்டியலில் இவ்வழக்கு இடம்பெறவில்லை.
எனவே, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணை வரும் 21ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழக அரசு இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் வேண்டுமானால் இதுகுறித்து முறையிடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.