
காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ஆனால் அந்த தீர்ப்பினை ஏற்காத கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை(அக்.,12)நடக்கவிருந்த நிலையில் இன்றே(அக்.,11)அவசரமாக இக்கூட்டம் கூடியது.
அதன்படி இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், 15 நாட்களுக்கு விநாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கு வரும் 16ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
காவிரி ஒழுங்காற்று குழு
#BREAKING | கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!#SunNews | #CauveryIssue pic.twitter.com/42q5wAEXrz
— Sun News (@sunnewstamil) October 11, 2023