Page Loader
மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்   

மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்   

எழுதியவர் Sindhuja SM
Mar 10, 2024
04:54 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவது கேமராவில் சிக்கியுள்ளது. அந்த மருத்துவர் குடிபோதையில் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர் போதைக்கு அடிமையானவர் என்றும், அவுரங்காபாத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பிட்கின் அரசு மருத்துவமனையில் அவர் இதற்கு முன்பு பணிபுரிந்தார் என்றும் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் சுகாதார சேவைகளின் தலைவரான டாக்டர் தயானந்த் மோதிபவ்லே, இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர்