விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு
ஓமனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் சரோகி, தன்னை விமானத்தில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் குமார் சரோகி, ஓமனை தளமாகக் கொண்ட வல்கன் கிரீன் ஸ்டீலின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 65 வயதான அவர் தன்னிடம் ஆபாச கிளிப்களைக் காண்பித்ததாகக் கூறி ஒரு பெண் புகார் அளித்துள்ளார். தனக்கு நடந்த இந்த் சம்பவத்தை அந்த பெண் ஒரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். கொல்கத்தாவில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் சரோகி தன்னுடன் எப்படி உரையாடினார் என்பதை அந்த பெண் விவரித்துள்ளார்.
எதிஹாட் ஏர்வேஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
முதலில் தன்னிடம் நன்றாக பேசி கொண்டிருந்த அவர், பிறகு தனது மொபைல் போனை வெளியே எடுத்து ஆபாச படங்களை தன்னிடம் காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எதிஹாட் ஏர்வேஸ் பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறிய அந்த பெண் அவர்களை பாராட்டியுள்ளார். "அவர்கள் என்னை அவர்கள் அமரும் பகுதியில் உட்கார வைத்து தேநீர் மற்றும் பழங்கள் வழங்கினார்கள்," என்று மேலும் அவர் கூறியுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், கொல்கத்தாவில் உள்ள பிதான்நகர் நகரக் காவல் துறையினர் சரோகி மீது இன்று 74(அடக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் குற்றவியல் சக்தியைத் தாக்குதல் அல்லது பயன்படுத்துதல்), 75(பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 79 (வார்த்தைகளை உச்சரித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.