Page Loader
கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா

கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா

எழுதியவர் Sindhuja SM
Jan 26, 2024
11:44 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள கனடா தூதரகம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்கு மிகவும் குடியரசு தின வாழ்த்துக்கள்" என்று கூறிய கனடா தூதரகம், இந்தியாவிற்கு தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த இடுகை இந்தியாவில் உள்ள கனடா தூதராகத்தால் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பகிரப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2021இல் நடந்த கனடாவின் கடைசி இரண்டு பொதுத் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கனடா விசாரித்து வரும் நிலையில் கனேடிய தூதரகம் இந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

டவ்கம் 

இந்திய-கனடா மோதல்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் 

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையே பல மாதங்களாக தூதரக மோதல்கள் நடந்து வருகின்றன. காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுகள் "அபத்தமானது" என்று இந்தியா நிராகரித்திருந்தது. இந்த மோதல்களை தொடர்ந்து, இந்தியாவில் இருந்த கனட அதிகாரிகளும், கனடாவில் இருந்த இந்திய அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர்.