Page Loader
கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

எழுதியவர் Sindhuja SM
Jul 16, 2024
12:16 pm

செய்தி முன்னோட்டம்

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று தனது 86வது வயதில் காலமானார். கேமலின் என்பது பிரபல ஸ்டேஷனரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். தண்டேகர் நேற்று காலை 7:00 மணியளவில் காலமானார் என்றும், பின்னர் மத்திய மும்பையில் தகனம் செய்யப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன. வரும் வியாழக்கிழமை அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. அவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். அது போக, அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தண்டேகரின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் மற்றும் தொழில்துறை போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்தியா 

கேமலினை விரிவுபடுத்திய சுபாஷ் தண்டேகர்

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "கேமலின் தொழில்துறையை நிறுவிய மூத்த தொழிலதிபர் சுபாஷ் தண்டேகரின் மறைவால், மராத்தி தொழில் உலகிற்கு புகழைக் கொண்டு வந்த தாத்தா உருவத்தை இழந்துவிட்டோம்." என்று இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா(எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவும், மராத்தி தொழில்முனைவோருக்கு தண்டேகரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நினைவுபடுத்தியுள்ளார். கேமலினை இந்தியாவின் முன்னணி ஸ்டேஷனரி பிராண்டாக மாற்றியதற்காக தண்டேகர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், அந்த நிறுவனம் அதன் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தி, அலுவலக பொருட்கள், கலைஞர் கருவிகள் மற்றும் பிற கல்விப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியது.