Page Loader
வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெங்களூரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரின் வீடியோ வைரல் 

வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெங்களூரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரின் வீடியோ வைரல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 20, 2024
05:23 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு தனது வீட்டின் அருகே ஒருவர் தன்னை தவறான நோக்கத்துடன் தொட்டதாக பெங்களூரு பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் அந்த ஆணின் வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "நேற்று இரவு பெங்களூருவில் எனது நண்பர் ஒருவர் என்னை என் வீட்டின் அருகே இறக்கிவிட்டார். அதன் பிறகு, நான் கேட்டைத் திறக்க முற்பட்டபோது, ​​ஒரு நபர் என்னைப் பின்னால் இருந்து தடவிவிட்டு ஓடத் தொடங்கினார். அப்போது, நான் என் நண்பரை அழைத்து, அவர் தப்பி செல்லும் முன் அவரை பிடிக்க சொன்னேன்"என்று அந்த பெண் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பெங்களூர் 

குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை 

அந்த பெண் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், குற்றம்சாட்டப்பட்ட நபர், கைகளால் தன் முகத்தை மூடி கொண்டே மன்னிப்பு கேட்பது தெரிகிறது. தன் தவறை அவர் ஒப்புக்கொண்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். "அந்த நபர் அவர் செய்ததை ஒப்புக்கொண்டார். அவரைப் பிடிக்க என் நண்பர் இருந்தார், அவர் இல்லையென்றால், என்ன நடந்திருக்கும்? அவரை பிடிக்க முடிந்திருக்குமோ முடிந்திருக்காதோ தெரியவில்லை. நாங்கள் பெங்களூர் போலீஸுக்கு சம்பவ இடத்திலேயே அழைப்பு விடுத்தோம். அப்போதே, அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்," என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தால், தற்காப்புக்காக அவரை தாக்கிய தன் மீதும் குற்றம்சாட்டப்படும் என்பதால், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீடியோ வைரல்