
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். எனவே, முக்கியமான நிதி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய சட்ட திருத்தம் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பெண் விவசாயிகளுக்கான PM கிசான் சம்மன் நிதி திட்டத்தை அரசு இரட்டிப்பாக்கலாம் என்று கூறப்படுகிறது.
சகஜ
இந்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்
பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
அப்போது, கிசான் சம்மன் நிதி முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல்-2024க்கு முன்னதாக பெண் விவசாயிளை கவரும் ஒரு முனைப்பாக இது இருக்கும்.
இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், வரவிருக்கும் பட்ஜெட் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்.
மக்களவை தேர்தல் நடைபெறும் வருடத்திலும், முழு பட்ஜெட்டை போட போதிய அவகாசம் இல்லாத நேரத்திலும், ஆளும் அரசாங்கம் பொதுவாக இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.