Page Loader
மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 
மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 

எழுதியவர் Nivetha P
May 23, 2023
04:27 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு மணமகள் ஜல்லிக்கட்டு காளையினை சீராக தனது புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அலங்காநல்லூர் பகுதியின் அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியினை சேர்ந்தவர் சிவபிரியா. பொது பணித்துறையில் பணியாற்றி வரும் இவர் தமிழர் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளையினை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று(மே.,22) நாகமலை புதுக்கோட்டை பகுதியினை சேர்ந்த ராஜபாண்டி என்பவரோடு திருமணம் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இருவர் குடும்பத்தினர் மற்றும் உறவுகள், நட்பு வட்டாரம் உள்ளிட்டோர் சூழ திருப்பரங்குன்றம் தாலுகா அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்கள் திருமணமானது மிக விமர்சையாக அரங்கேறியுள்ளது.

ஜல்லிக்கட்டு 

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு 

இதனை தொடர்ந்து திருமண சீராக சிவபிரியாவிற்கு பல்வேறு பொருட்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் பாசமாகவும், மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காளையினை மணமேடையில் ஏற்றிய மணமகள் தனது கணவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, இருவரும் அந்த ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு மேடையில் நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார்கள். பின்னர் சிவபிரியா தனக்கு கொடுக்கப்பட்ட மற்ற சீர் வரிசையோடு, தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையினையும் சீராக தனது புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.