பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த சர்வதேச நிருபர்களுக்கு சர்ப்ரைஸ்: பிஹார் மக்கானா, ஒடிசா காபியுடன் இந்திய கலாச்சார மீடியா கிட்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் செப்டம்பர் 12- 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு, இந்தியாவின் பல்வகைமை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சிறப்பு மீடியா கிட் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்(MEA) தயாரித்துள்ள இந்த ஊடக தொகுப்பு, செய்தி பரிமாற்ற ஆவணங்களை சார்ந்ததாக மட்டுமின்றி, இந்தியாவின் உணவு பண்பாடு, விவசாயப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய கைவினை பொருட்களை உலகரங்கிற்கு எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் உயர்நிலை தூதரக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், வெளிநாட்டு நிருபர்கள் இந்திய உணவு, உள்ளூர் விவசாயப் பொருட்கள் மற்றும் கைவினைத் திறன்களை அனுபவித்து அறிய இந்த 'மீடியா கிட்' ஒரு பாலமாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மீடியா கிட்
மீடியா கிட்டில் இடம்பெற்றுள்ள முக்கியப் மாநிலப் பொருட்கள்
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி வாசுதேவ் ரவி இது குறித்துத் தெரிவிக்கையில், "சர்வதேச ஊடகங்களுக்கு 'இந்தியக் கதையை' எடுத்துரைக்கவும், நமது நாட்டின் தனித்துவமான பிராந்திய உற்பத்திகளை அறிமுகப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
பிகாரின் பாரம்பரிய பானமான 'சத்து' மற்றும் உலகப் புகழ்பெற்ற 'மக்கானா' தாமரை விதை தின்பண்டங்கள். ஒடிசாவின் மலைப்பகுதியான கோராபுட்டில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் சிறப்பு ரகக் காபி, குஜராத் மாநில கைவினைஞர்களின் திறமையை பறைசாற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள்.