
காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
கொரோனாவால் இன்று(ஏப் 3) காரைக்காலில் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அநத மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரைக்காலில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரோனாவால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இணை நோய்கள் இருந்ததே அந்த பெண் உயிரிழந்ததற்கு காரணம் என்று ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா
பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
காரைக்காலில் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இதனையடுத்து, அந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். திரையரங்கம், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்." என்று அந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.