Page Loader
சென்னையில் ஒரு நாள்: இறந்தும், ஒரு உயிரை காப்பாற்றிய சேலம் இளைஞர் 
சந்தோஷ்குமாரின் இதயம் மட்டுமல்லாமல், அவரது பிற உள்ளுறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டுள்ளது

சென்னையில் ஒரு நாள்: இறந்தும், ஒரு உயிரை காப்பாற்றிய சேலம் இளைஞர் 

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2024
06:00 pm

செய்தி முன்னோட்டம்

சேலம் மாவட்டத்தில், மூளை சாவு அடைந்த 26 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தை, அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு இன்று பொறுத்தியுள்ளனர் மருத்துவர்கள். சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். ஒரு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சந்தோஷின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். உடனே, மருத்துவமனை தரப்பில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்மூலம், சந்தோஷ் குமாரின் இதயம், சென்னை தனியார் மருத்துவமனையில் உள்ள சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சந்தோஷ்குமாரின் இதயம் மட்டுமல்லாமல், அவரது பிற உள்ளுறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

embed

உயிரை காப்பாற்றிய சேலம் இளைஞர்

#Watch | சேலம் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 26 வயது இளைஞரின் இதயத்தை குடும்பத்தினரின் அனுமதியுடன் தானமாக பெற்று விமானம் மூலம் கொண்டு வந்து, சென்னையில் உள்ள 11 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்திய மருத்துவர்கள்!#SunNews | #Salem | #HeartDonation | #OrganDonation pic.twitter.com/6AKykRmvdk— Sun News (@sunnewstamil) May 8, 2024