Page Loader
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!
பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2024
11:06 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு, நடைபெறும் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (அக்., 14) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பு தேர்வு 03.03.2025 அன்று துவங்குகிறது. 25.03.2025 வரை தேர்வு நடைபெறும். அதேபோல 11ம் வகுப்பு தேர்வு05.03.2025 துவங்கி 27.03.2025 நிறைவு பெறும். 10ம் வகுப்பு பொது தேர்வு, 28.03.2025 தொடங்கி 15.04.2025 நிறைவு பெறுகிறது. செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு: 07.02.2025 முதல் 14.02.2025 வரை 11ம் வகுப்பிற்கு: 15.02.2025 முதல் 21.02.2025 வரை 10ம் வகுப்பிற்கு: 22.02.2025 முதல் 28.02.2025 வரை

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அட்டவணை

பொதுத்தேர்வு அட்டவணை 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தமிழ்: 28.03.2025 ஆங்கிலம்: 02.04.2025 கணிதம்: 07.04.2025 அறிவியல்: 11.04.2025 சமூக அறிவியல்: 15.04.2025 தேர்வு செய்யப்பட்ட மொழிப்பாடம்: 04.04.2025 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மொழிப்பாடம்: 05.03.2025 ஆங்கிலம்: 10.03.2025 கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல்: 13.03.2025 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்: 17.03.2025 இயற்பியல், பொருளாதாரம்: 20.03.2025 கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி: 24.03.2025 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்: 27.03.2025

அட்டவணை

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்: 03.03.2025 ஆங்கிலம்: 06.03.2025 கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி: 11.03.2025 கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல்: 14.03.2025 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்: 18.03.2025 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்: 21.03.2025 இயற்பியல், பொருளாதாரம்: 25.03.2025 ரிசல்ட் தேதி 10ம் வகுப்பு: மே 19ம் தேதி, 2025 11ம் வகுப்பு: மே 19ம் தேதி, 2025 12ம் வகுப்பு: மே 9ம் தேதி, 2025

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post