தலைநகர் டெல்லியில் PVR தியேட்டர் அருகே குண்டுவெடிப்பு
டெல்லியில் PVR அருகே உள்ள கடையில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது. வடக்கு டெல்லியின் பிரசாந்த் விஹாரில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் அருகே உள்ள பிரபலமான இனிப்புக் கடையில் வியாழன் அன்று பெரும் சத்தத்துடன் வெடித்ததில், வெள்ளை நிற தூள் போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஸ்வீட் கடையை ஒட்டியுள்ள பன்சி வாலா பூங்காவின் எல்லைச் சுவருக்கு அருகில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரின் கூற்றுப்படி, வெடிப்பு தொடர்பான அழைப்பு காலை 11:48 மணிக்கு வந்தது.