அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன
செய்தி முன்னோட்டம்
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கூற்றுப்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 33 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்று இடங்களில் பாஜக வெற்றி பெற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
சிக்கிமில், 32 இடங்களுள் SKM 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், இரண்டில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று ECI அறிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சி (NPEP) மற்றும் பிற கட்சிகள் தலா 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தியா
மீண்டும் அருணாச்சல் முதல்வர் ஆகிறார் பெமா காண்டு
அருணாச்சல பிரதேசத்தின் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
அருணாச்சல பிரதேச முதலமைச்சரும், பாஜக தலைவருமான பெமா காண்டு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். மேலும் சிக்கிம் அமைச்சரும் SKM இன் தலைவருமான பிரேம் சிங் தமாங்கும் மூன்றாவது முறையாக வெற்றிபெற உள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரு மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தின் பாபம் பரே மாவட்டத்தில் கனமழைக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
சிக்கிமில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகின. அருணாச்சலப் பிரதேசத்தில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகின.