Page Loader
ஆகஸ்ட் 15ஆம் தேதி வாக்கில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு; முன்னணி வேட்பாளர்கள் யார்?
ஜே.பி. நட்டா, ஜனவரி 2020 முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார்

ஆகஸ்ட் 15ஆம் தேதி வாக்கில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு; முன்னணி வேட்பாளர்கள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2025
03:53 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, சுதந்திர தினத்தன்று பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ஜனவரி 2020 முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார். 2024 பொதுத் தேர்தல் வரை கட்சியை வழிநடத்த அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவும் அதன் தாய் அமைப்பான RSS-உம் இன்னும் இந்தப் பதவிக்கான பெயரை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவில்லை. ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு அடுத்த பாஜக தேசியத் தலைவர் யார் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிறுவன அனுபவம் மற்றும் தொண்டர் அடிப்படையில் வலுவான பல தலைவர்கள் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள் என்று இந்துஸ்தான் டைம்ஸ் பெயர் குறிப்பிடாத கட்சி ஆதாரங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள்(1/2)

அடுத்த பாஜக தலைவர் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் யார்?

தர்மேந்திர பிரதான் - ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர். பாஜக முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர், கட்சியின் நிறுவன வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது நியமனம், மாநிலத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என கருதப்படுகிறது. பூபேந்திர யாதவ் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர். ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நெருங்கிய நம்பிக்கையாளர் என்று கூறப்படுகிறது. கட்சிக்குள் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர். சிவராஜ் சிங் சவுகான் - மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது மத்திய விவசாய அமைச்சராக இருப்பவரும். வலுவான அமைப்புப் பின்ணணியுடன், மக்களிடையே பரந்த வரவேற்பு கொண்டவர்.

வேட்பாளர்கள்(2/2)

அடுத்த பாஜக தலைவர் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் யார்?

பி.டி. சர்மா - பாஜகவில் மூத்த தலைவர். கட்சி அமைப்பில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், தலைமை பொறுப்புக்கான வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். மனோகர் லால் கட்டார் - ஹரியானாவின் முன்னாள் முதல்வர். மாநிலத்தில் ஆட்சி அனுபவம் மற்றும் அமைப்புத் திறமை கொண்டவர். பாஜக தலைமையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 15க்கு முன்னோ பின்னோ முக்கிய அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியமில்லை எனக் கூறப்படுகிறது.