பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்; அமைச்சரவையில் இணைந்தார் ஜேபி நட்டா
மோடி 3.0 அமைச்சகத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் ஜேபி நட்டா பதவி ஏற்றார். 'ஒருவர், ஒரே பதவி' என்ற கொள்கையை, பாஜக பின்பற்றுவதால், விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய பாஜக தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, கட்சியின் அமைப்புக் கட்டமைப்பில் இருந்து, மோடி 3.0 அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022ல் இருந்து கட்சியின் 11வது தலைவராக செயல்பட்டு வந்த நட்டாவின் தலைமையில் 2024 தேர்தலை பாஜக எதிர்கொண்டது. மே 2019 இல் உள்துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இணைந்த அமித் ஷாவிடமிருந்து நட்டா பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார். இன்று நடைபெற்ற பதவிப்பிரமணத்தில், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் அமித்ஷாவுக்குப் பிறகு J.P.நட்டா அமைச்சராகப் பதவியேற்றார்.