சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM
செய்தி முன்னோட்டம்
சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(SKM), மொத்தமுள்ள 32 இடங்களுள் 19 இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
அதன் போட்டியாளரும் எதிர்கட்சியுமான சிக்கிம் ஜனநாயக முன்னணியை(SDF) வீழ்த்திய SKM மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
மேலும், ECI புள்ளிவிபரங்களின்படி, SKM 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
SKM பெரும்பான்மையை தொட்டு 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில், பவன் குமார் சாம்லிங்கின் SDF கட்சி, இதுவரை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. சிக்கிமில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகின. அருணாச்சலப் பிரதேசத்தில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்தியா
காங்கிரஸும் பாஜகவும் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை
சிக்கிமில் ஆளும் SKM கட்சிக்கும், பவன் குமார் சாம்லிங்கின் SDF கட்சிக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவியது.
இந்த வடகிழக்கு மாநில தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
SKM மற்றும் SDF தலா 32 வேட்பாளர்களையும், பாஜக 31 வேட்பாளர்களையும் களமிறக்கி இருந்தன. காங்கிரஸ் 12 இடங்களிலும், சிட்டிசன் ஆக்ஷன் பார்ட்டி-சிக்கிம் 30 இடங்களிலும் போட்டியிட்டன.
சிக்கிமில் போட்டியிட்ட 146 பேரில், முதல்வர் பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா மற்றும் பாஜகவின் நரேந்திர குமார் சுப்பா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர்.