Page Loader
சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ
இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடப்பது இது முதல் முறையல்ல.

சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2023
05:55 pm

செய்தி முன்னோட்டம்

திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. பாக்பாசா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ஜதாப் லால் நாத், சட்டசபை அமர்வு நடந்து கொண்டிருந்தபோது மொபைலில் ஆபாசப்படம் போட்டு பார்த்து கொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடப்பது இது முதல் முறையல்ல. 2012ஆம் ஆண்டு, கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்த போது, ​​மாநில சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் ஆபாச வீடியோவை மொபைல் போனில் பார்ப்பது கேமராவில் சிக்கியது.

தமிழ்நாடு

கர்நாடக சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள்

பின்னர், இது குறித்து பேசிய அந்த அமைச்சர்களில் ஒருவர், "கல்வி நோக்கங்களுக்காகவும், ரேவ் பார்ட்டிகளைப் பற்றி மேலும் அறியவும்" வீடியோவைப் பார்த்ததாக கூறினார். 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தால், அப்போதைய கூட்டுறவு அமைச்சர் லக்ஷ்மண் சவடி மற்றும் பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர். இந்த சர்ச்சையின் விவாதங்கள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில், அப்போதைய கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது மூன்று துணை முதல்வர்களில் ஒருவராக லக்ஷ்மண் சவடியை நியமித்து புதிய சர்ச்சையை கிளப்பினார்.