NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?
    ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக

    ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 03, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராஜவர்தன் சிங் ரத்தோர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெரும் என்றும், அதன் பின்பு ஆட்சியமைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

    மேலும், இந்த தேர்தல் முடிவு என்பது ஒரு கூட்டு முயற்சி எனவும், கட்சித் தலைமை சரியான முடிவையே எடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானின் முதல்வர் பதவி யாருக்கு? 

    1993ம் ஆண்டு ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்பு ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸூம், பிஜேபியும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன.

    தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலோட்டே முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், 114 இடங்களில் பாஜகவும், 70 இடங்களில் காங்கிரஸூம், 15 இடங்களில் இதர வேட்பாளர்கலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    எனவே, இந்த முறை பாரதிய ஜனதா கட்சியே பெரும்பான்மையைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் முடிவுகள்

    ராஜஸ்தானில் பாஜகவின் முகம்: 

    2003 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது, அக்கட்சியைச் சேர்ந்த வசுந்தரா ராஜேவே முதல்வராக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

    மேலும், 2003ம் ஆண்டிலிருந்தே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் முகமாகவும் அவரே செயல்பட்டு வருகிறார். எனவே, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் அவரே இந்த முறையும் அம்மாநில முதல்வராக அமர்த்தப்படுவார் எனத் தெரிகிறது.

    வசுந்தரா ராஜேவைத் தவிர, ராஜஸ்தான் எம்பி தியா குமாரி, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரது பெயர்களும் ராஜஸ்தான் மாநில முதல்வருக்கான பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ராஜஸ்தான்

    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இந்தியா
    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம் இந்தியா
    இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை  இந்தியா
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது இந்தியா

    தேர்தல்

    மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன்  கோவை
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    அதிமுகவின் கூட்டணிக்கு புதுபெயர்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  அதிமுக
    கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ? பாஜக

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    இந்தியா

    உத்தரகாண்ட்: சிக்கியிருந்த போதிலும் குழுவாக திறம்பட செயல்பட்டு மீட்பு பணிகளுக்கு உதவிய 41 தொழிலாளர்கள் உத்தரகாண்ட்
    பயங்கரவாதி பன்னூனை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு: விசாரணை குழுவை அமைத்தது இந்தியா அமெரிக்கா
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இஸ்லாம்
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025