'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப்-11) கேரளாவில் உள்ள தனது முன்னாள் தொகுதியான வயநாடுக்கு சென்றார்.
அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவுடன், ராகுல் காந்தி கல்பெட்டா நகரில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
"பாஜக என் வீட்டைக் கைப்பற்றி, என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் அவர்களால் வயநாடு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுக்க முடியாது," என்று ராகுல் காந்தி இன்று கூறியுள்ளார்.
தன்னிடம் இருந்து எம்பி பதவி மட்டுமே பறிக்கப்பட்டதாகவும், வயநாடு மக்களின் பிரதிநியாக இருப்பதே அவருக்கு போதும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
details
இன்று வயநாட்டில் உரையாடிய ராகுல் காந்தி பேசியதாவது:
வழக்கமான பிரச்சாரத்தில், கொள்கைகள் மற்றும் என்ன நடக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோம்.
ஆனால் 2014 இல், பிரச்சாரம் வேறு மாதிரியாக இருந்தது.
வயநாடு மக்களிடம் பாசம் இருந்தது. கேரள மக்கள் என்னை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவும் ஒரு மகனாகவும் உணர வைத்தனர்.
இப்போது சில ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கிறேன். நான் நிறைய யோசித்தேன்.
எம்.பி என்றால் மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். மக்களின் உணர்வுகள், துன்பங்கள் மற்றும் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
சில ஆண்டுகளாக நான் பாஜகவுடன் போராடி வருகிறேன். ஆனால் அவர்களால் என் போராட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர்களது எதிராளி காவல்துறைக்கு பயப்படுவதில்லை என்பதும் மிரட்டலுக்கு பயப்படுவதில்லை என்பதும் அவர்களுக்கு புரியவில்லை. என்று கூறியுள்ளார்.