NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு 
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 26, 2023
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், தேமுதிக'விற்கு இதில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், 3வது முறையாக ஆட்சியினை பிடித்து தக்கவைத்து கொள்ள பாஜக பல விஷயங்களை செய்து வருகிறது.

    இதற்கிடையே தற்போது அண்ணாமலை வரும் ஜூலை 28ம் தேதி பாதயாத்திரை துவங்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.

    இந்த பாதயாத்திரையானது ராமேஸ்வரத்தில் துவங்கவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், இத்துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார் என்று தெரிகிறது.

    அதனை தொடர்ந்து, இந்த விழாவில் கலந்துக்கொள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.க தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பாஜக 

    பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை

    இந்நிலையில் தேமுதிக பொருளாளராகவுள்ள பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தனம் தாங்கள் எந்த கட்சியிலும் கூட்டணியில் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.

    ரகசியமாக கூட்டணி குறித்து பேசுவது தேமுதிகவின் பழக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கு திமுக'வோடு கூட்டணி குறித்து தேமுதிக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறது என்று வதந்திகள் வெளியானது தான் காரணமாகும்.

    இதனிடையே, பாஜக மாநில துணை தலைவரான கரு.நாகராஜன் ராமேஸ்வரத்தில் நடக்கவுள்ள 'என் மண் என் மக்கள்' என்னும் தலைப்பிலான பாதயாத்திரை துவக்க விழாவில் கலந்துக்கொள்ளுமாறு பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

    சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேமுதிக
    பாஜக
    அண்ணாமலை
    அமித்ஷா

    சமீபத்திய

    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்

    தேமுதிக

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு விஜயகாந்த்

    பாஜக

    பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு கர்நாடகா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  ராஜ்நாத் சிங்
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025