உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், கொரியர் நிறுவனம் ஒன்று இறந்த நபர்களின் உடல்களை வேறு வேறு முகவரிக்கு மாறி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா, கட்டாக் மாவட்டத்தில் உள்ள நேமாலோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட குவானாசாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிலாஷ் புயான்.
இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனால், அவரது உடல் கொரியர் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உறவினர்கள் இறுதி சடங்கை மேற்கொண்டுள்ளனர்.
இறந்த உடல்கள்
இறந்த உடல்களை மாறி மாறி கொரியர் சர்வீஸ் - கொந்தளித்த குடும்பத்தினர்கள்
இந்நிலையில், தாங்கள் எரித்த உடல் பிலாஷின் உடல் அல்ல என்றும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருடையது என்றும் குடும்பத்தினருக்கு போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மறுபுறம் கொரியர் சேவை மூலம் பெறப்பட்ட மற்றொரு உடல் தங்களுடையது அல்ல என்று ராஜஸ்தானில் உள்ள குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
இதன் மூலம் கொரியர் நிறுவனம் இறந்த உடல்களை மாற்றி அனுப்பியது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரியர் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.