
பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்ய விரும்புவோர், பணத்தேவை உள்ளோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தினை, பைக் டாக்சி என்னும் தனியார் நிறுவனத்தோடு இணைத்து கொண்டு டாக்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆட்டோ, வாடகை கார் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கையில் இதன் கட்டணம் குறைவு என்பதால் பொது மக்கள் பலரும் இந்த பைக் டாக்சி சேவையினை பயன்படுத்துகிறார்கள்.
ஓலா, ஊபர் போல் செல்போன் செயலி மூலம் நாம் இருக்கும் இடம் மற்றும் போக வேண்டிய இடத்தினை பதிவு செய்தால், அங்கேயே வந்து நம்மை அழைத்து சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுகிறார்கள்.
பயணிகளுக்காக சிறப்பு சலுகைகளும் இந்த நிறுவனம் வழங்குவதாக தெரிகிறது.
பேட்டி
காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
இந்நிலையில், "தமிழக அரசு தற்போதுவரை பைக் டாக்சிக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை" என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இது குறித்து கோவை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "சில விவகாரங்களில் முடிவு எடுக்க மத்திய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
பைக் என்பது தனிநபர் பயணம் செய்யும் வாகனம் மட்டும் தான்.
இதனை வாடகைக்கு விடக்கூடும் வாகனமாக அரசு அங்கீகரிக்கவில்லை.
ஆதலால் பைக் டாக்சிகள் இயக்கப்பட கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும்.
இது தொடர்பான நடவடிக்கைகளை காவல்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.