Loading...
பீகாரில் விருந்துக்குச் சென்ற சிறுவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு
சிறுவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு

பீகாரில் விருந்துக்குச் சென்ற சிறுவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
07:35 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ராம்பூர் ஷியாம்சந்த் கிராமம் அருகே கங்கை நதியில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராகோபூர் திவாரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சிறுவர்கள் சிலர் படகில் பயணம் செய்துள்ளனர். திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து படகு நதியில் கவிழ்ந்தது.

மீட்பு

விபத்தின் பின்னணியும் மீட்பு நடவடிக்கைகளும்

தகவலறிந்து வந்த வைஷாலி மாவட்ட ஆட்சியர், SDRF மற்றும் NDRF மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தினார்.

விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 6 பேர் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இச்சம்பவத்திற்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT