
கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு
செய்தி முன்னோட்டம்
மாநில கல்வித்துறை ஊழியர்களிடம், பணியிடங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று பீகார் அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநில கல்வித் துறை இயக்குநர் புதன்கிழமை (ஜூன் 28) வெளியிட்ட உத்தரவில், "அலுவலக கலாசாரத்திற்கு முரணான உடையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது கவனிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் அதிகாரிகள் அல்லது மற்ற பணியாளர்கள் சாதாரண உடைகளை அணிவது அலுவலகத்தில் பணி கலாச்சாரத்திற்கு எதிரானது.
எனவே, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித் துறை அலுவலகங்களுக்கு சாதாரண உடையில் வரக்கூடாது. கல்வித் துறை அலுவலகங்களில், சாதாரண உடைகள், குறிப்பாக ஜீன்ஸ், டி-சர்ட்கள் அணியாக கூடாது.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dress code in bihar govt
பீகார் அரசு அலுவலகங்களில் ஆடைக்கு கட்டுப்பாடு
பீகாரின் சரண் மாவட்டத்தின் ஆட்சியர், கடந்த ஏப்ரல் மாதம், அனைத்து அரசு ஊழியர்களும் அரசு அலுவலகங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதைத் தடைசெய்தார். ஊழியர்கள் முறையான ஆடைகளை அணிந்து அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
முன்னதாக, பீகார் அரசு 2019 ஆம் ஆண்டில், மாநிலச் செயலகத்தில் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதைத் தடை செய்தது. அலுவலக கலாச்சாரத்தை பராமரிப்பதே இதன் நோக்கம் என்று மாநில அரசு அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநில அரசு செயலக ஊழியர்களை அலுவலகத்தில் எளிமையான, வசதியான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொண்டது.