
"பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "பாரத் உங்களை வரவேற்கிறது" என்று இந்தியாவின் பெயர் மாற்றத்தை குறிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க உரையின் போது பேசிய பிரதமர் மோடி, "பாரத் உங்களை வரவேற்கிறது." என்று கூறினார்.
மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஜி20 புத்தகத்திலும் "பாரத்" என்ற பெயர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"பாரத், ஜனநாயகத்தின் தாயாகும்". "பாரத் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயராகும். இது அரசியலமைப்புச் சட்டத்திலும் 1946-48 விவாதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஜி20 புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
டுவ்க்
'உலகில் நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது':பிரதமர் மோடி
"இந்தியா, பெயர் மாற்றத்திற்கான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தவுடன், ஐ.நா. பதிவேடுகளில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவோம்" என்று ஐநா சபை நேற்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி20 உச்சி மாநாட்டின் தொடக்க உரையில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் போர் உலகளவில் நம்பிக்கை பற்றாக்குறையை ஆழமாக்கியுள்ளது என்றும், அதை நம்பிக்கையாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"COVID-19க்குப் பிறகு, உலகில் நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (உக்ரைன்)போர் இந்த நம்பிக்கைப் பற்றாக்குறையை ஆழமாக்கியுள்ளது. கோவிட்-ஐ தோற்கடிக்க முடிந்த நம்மால், இந்த நம்பிக்கை பற்றாக்குறை நெருக்கடியிலும் வெற்றி காண முடியும்," என்று பிரதமர் மோடி கூறினார்.