Page Loader
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA 
புதிய புகைப்படத்தில், அந்த சந்தேக நபர், தொப்பி மற்றும் முகமூடி அணியாமல், பேருந்தில் பயணிப்பது போல் உள்ளது pc: இந்தியா டுடே

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 07, 2024
06:24 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவிலுள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தேசிய புலனாய்வு துறை. இந்த புதிய புகைப்படத்தில், அந்த சந்தேக நபர், தொப்பி மற்றும் முகமூடி அணியாமல், பேருந்தில் பயணிப்பது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுயுள்ளது NIA. கிழக்கு பெங்களூருவில் உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில், மார்ச் 1 ஆம் தேதி நடந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையை துவங்கிய NIA, CCTV காட்சிகளை ஆராய்ந்ததில், குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து ஓட்டலுக்குள் நுழையும் புகைப்படத்தை வெளியிட்டது.

புலனாய்வு 

மக்களின் உதவியை நாடும் NIA

பிரதான சந்தேக நபராக வெளிப்பட்ட அடையாளம் தெரியாத நபரைப் பற்றிய தகவல்களை மக்கள் அனுப்பக்கூடிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்களை நிறுவனம் பகிர்ந்து கொண்டது. மேலும் தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி அளித்துள்ளது. ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இந்த வார தொடக்கத்தில் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ் (IED) மூலம் இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே, கர்நாடக காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.