
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
"எப்பொழுது அரசும் நிர்வாகமும் அச்சம் மற்றும் அடக்குமுறையின் அடையாளமாக மாறுகிறதோ, அப்போது அவற்றின்(பாஜக) முடிவு நெருங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." --சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
"பிபிசி அலுவலகத்தில் நடந்த ரெய்டுகளுக்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், ஆர்வலர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, உண்மையை பேசுபவர்களை இந்திய அரசு வெட்கமின்றி வேட்டையாடுகிறது. உண்மைக்காக போராடுவதற்கு ஒரு விலையை செலுத்த வேண்டி இருக்கிறது." --ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
இந்தியா
அரசியல் தலைவர்களின் கருத்துகள்
" வருமான வரி துறையினரின் பணியைச் செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும். பிபிசி உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பாகும். காங்கிரஸின் கொள்கையுடன் பிபிசியின் பிரச்சாரம் பொருந்துகிறது. களங்கம் நிறைந்ததும், இந்தியாவுக்கு எதிரானதும் தான் பிபிசியின் வரலாறு" --பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா
"டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட உண்மையாகவா? இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை." --திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா
"பிபிசியின் அலுவலகங்களில் நடந்த ஐடி-ரெய்டு, மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது." --காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கே.சி.வேணுகோபால்.