ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன் நீர் வரத்து குறைந்த நிலையில், தற்போது மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 13,000 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரமும், காவிரி ஆற்றில் மிக அதிக அளவில் நீர் வரத்து இருந்ததால் பொதுமக்கள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.