NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு
    கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு

    கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 12, 2024
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகளுக்கு உதவுவதற்காக தென்னக ரயில்வே டாக்டர் எம்ஜிஆர் சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையத்தை அமைத்தது.

    இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    உதவி எண்கள் சென்னை கோட்டம் மற்றும் ரயில் பாதையில் உள்ள மற்ற நிலையங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

    ரயில்வே அமைச்சகம் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அளித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின்படி, பின்வரும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    சென்னை கோட்டம்: 04425354151, 04424354995

    சமஸ்திபூர்: 8102918840

    தர்பங்கா: 8210335395

    டானாபூர்: 9031069105

    டிடியு சந்திப்பு: 7525039558

    பயணிகள்

    19 பயணிகள் காயம்

    மைசூர்-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மோதியதில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    மோதலுக்குப் பிறகு, 12-13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் ரயில் திருப்பியதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரயில்வே முதற்கட்டமாக தெரிவித்துள்ளது.

    இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிலைமையை ஆய்வு செய்து, மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் விபத்து குறித்த தகவலைப் பெற்று ஆலோசனைகளை வழங்கினார்.

    விபத்திற்கான காரணம்

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை

    ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

    மேலும், விபத்து நடந்த தகவல் கிடைத்த உடனேயே அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் மாவட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான விரிவான காரணத்தை கண்டறிவதற்காக தெற்கு ரயில்வேயின் வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    நிபுணர் குழு ஆய்வு

    #NewsUpdate | திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே வல்லுநர் குழு ஆய்வு!#SunNews | #TrainAccident | #Kavaraipettai pic.twitter.com/1x2z8nvjme

    — Sun News (@sunnewstamil) October 12, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    மீட்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்

    #JUSTIN | கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த பகுதியில் மழை விட்டுள்ளதால் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியது!#SunNews | #TrainAccident | #Kavaraipettai https://t.co/UkJaZ3Kvr1

    — Sun News (@sunnewstamil) October 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ரயில்கள்

    மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன இந்தியா
    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு சென்னை
    ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா? ஊட்டி
    பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு பெங்களூர்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.என்.ரவி
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் பாராலிம்பிக்ஸ்

    தமிழ்நாடு செய்தி

    கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி கொடைக்கானல்
    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு சென்னை
    வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி

    தமிழகம்

    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? மு.க.ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025