
ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் வார இறுதி நாட்களில் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்க கூடும்.
இதன் காரணமாகவே விடுமுறை நாட்களில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் அக்.15ம்.,தேதி முதல் 24ம்.தேதி வரை தசரா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், ஆயுதப்பூஜை, சரஸ்வதிப்பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வரும் அக்.20, 21 மற்றும் 22 தேதிகளில் சென்னை-தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிறுத்தங்களிலிருந்து கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிறப்பு பேருந்துகள்
#BREAKING | ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.#SunNews | #AyuthaPooja | #SpecialBus pic.twitter.com/CoPfFeE62s — Sun News (@sunnewstamil) October 13, 2023