இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள்
140 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1300ஆக அதிகரித்துள்ளது. இன்று(மார் 23) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 7,605 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 இறப்புகள் பதிவானதை அடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,816 ஆக உயர்ந்திருக்கிறது. கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு இறப்பு நேற்று பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் பதிவான கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,99, 418) உயர்ந்துள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.