Loading...
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு; 5 முனை போட்டியால் சூடாகும் தேர்தல் களம்
5 முனை போட்டியால் சூடாகும் தேர்தல் களம்

இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு; 5 முனை போட்டியால் சூடாகும் தேர்தல் களம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
09:51 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி (NTK) தனது வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா என்பவரும், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) தொகுதியில் கார்த்திக் குமாரி என்பவரும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

தேர்தல் களம்

தேர்தல் களம்: 5 முனைப் போட்டி உருவாகிறது

இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் களம் இறங்குவதால் தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது.

ஏற்கனவே தவெக, அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர்.

முக்கிய தேர்தல் தேதிகள்:

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16

வாக்குப்பதிவு நாள்: அக்டோபர் 6

வாக்கு எண்ணிக்கை & முடிவுகள்: அக்டோபர் 9

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT